தமிழர்கள் பின்பற்றியது மதமா..? சமயமா..?
சமயம் மற் றும் மதம் இதில் எதை தமிழர்கள் பின்பற்றியிருப்பார்கள்..! ******†*** சமயம் என்பது சமையம் என்ற சொல்லின் திரிபு. சமை - சமையம் - சமயம் சமைதல் என்றால் ஆக்குதல் , பதமாகுதல், தகுகியாக்குதல் , முழுமைப்படுத்துதல் என்று பொருள்படும் சமையல் என்றால் உண்ணுவதற்கு ஏற்ற வகையில் உணவைப் பக்குவப் படுத்துதல் என்பதாகும் சோறு ஆக்குதல் என்பது போல ஆக்குதல் என்றால் குற்றம் களைந்து அரிசியில் கிடக்கிற கல்லும் குறுநொய்யும் ஆகிய குற்றத்தைக் களைந்து, அரிசியை உண்ணும் பதத்துக்கு ஆக்கி முழுமைப் படுத்துதல்..! என்றாகும் அதுபோல…! காட்டுவிலங்காக இருந்தவனை மனிதனாக ஆக்கி, அவனுடைய குணத்திலும் மனதிலும் காணப்படும் ஓட்டைகளை நிரப்பி, தன்னையே எண்ணிக் கொண்டிருக்காமல் உடன்வாழ்பவர்களைப் பற்றியும் எண்ணிப் பார்க்கச் செய்து அவனைப் பக்குவப்படுத்தி அன்பால் பூக்கச் செய்து, முழுமைப்படுத்தித் தெய்வநிலைக்கு ஏற்றுவதே சமயம். ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்''...…..! என்னும் வள்ளுவன் அறிந்த சமத்துவ சமூகத்தை உருவாக்கும். மதம் என்றால் என்ன…..? வதை +...