சித்தர் ஓரையே தமிழர் புத்தாண்டு

தமிழரின் வானியல் அறிவு இரு கூறுகளை கொண்டது. 

ஒன்று முழுமையான அறிவியலான வான்அறிவியல் (Astro physics) . மற்றது பிறப்பயிம் (astrology)  இது தமிழர்களின் மரபு.

இத்தகைய வானியல் அறிஞர்களை தொல்காப்பியர் அறவர் எனப் பாரட்டுவர் 

வியாழன் கோள்களை பற்றிய துல்லியமான கணக்கீட்டை கணியர்களும் வள்ளுவர்களும் அறிந்துள்ளனர் அதை வியாழ‌ மாலை என்று எழுதியுள்ளார்கள்.. இதை அழித்து விட்டார்கள் கயவர்கள்









ஒரு சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்து அடுத்த சூரியன் உதிக்கும் நேரத்தை ஒரு‌ நாள் என்று கணக்கீட்டு

ஒரு முன்றாம் பிறையிலிருந்து நிலா தொடங்கும் நேரத்தில் இருந்து அடுத்த முன்றாம் பிறை நிலா தொடங்கும் நேரத்தை ஒரு மாதம் எனவும் வகுத்தார்கள் 

அதாவது 

29.5 * 12 = 354 days 

இதை தான் ஆங்கிலத்தில் லூனார் காலம் திரி என்று அழைத்தார்கள் (lunar calendar) 

புமி சூரியனை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 365.25 நாட்கள். ஆனால் லூனார் காலம் திரியில் 354 நாட்கள் மட்டுமே மீதம் 11.25 நாட்கள் குறைகிறது 

ஆனால் இந்த லூனார் காலம் திரி அன்றைய சிவன் காலத்தில் வாழ்ந்த வேட்டையாடி வாழ்ந்த மக்களுக்கு போதுமானதாக இருந்தது … 

ஆனால் நீருழிக்கு பிறகு இலங்கைக்கு சென்ற தமிழர்களுக்கு கட்டாயம் விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆகையால் கால காண்க்கீட்டை மாற்றுகிறார்கள்

ஆனால் பாலைவன நாட்டிற்கு சென்ற தமிழர்களுக்கு இது மாற்ற தேவையில்லாமல் இருந்தாமையால் அவர்கள் அதையே பயன்படுத்தினர்.
பாலை வனத்தில் விவசாயம் செய்ய முடியதல்லாவா…

6000 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயம் செய்யும் போது பாலைவன தமிழர்கள் மாற்றி கொண்டார்கள்.

ஆனால் கி.பி 670 ஆண்டு இஸ்லாமிய சமயம் உருமாற்றம் அடைந்திருந்த போது அதை செம்மை படுத்தி பழைய நிலைக்கு கொண்டு சென்ற முகமது நபி அவர்கள் ஆதி தமிழ் வம்சாவளியினர் பின்பற்றியத்தையே பின்பற்ற செய்கிறார்

ஆகையால் தான் இன்றும் இஸ்லாமியர்கள் லூனார் காலம் திரியையே பயண்படுத்துகிறார்கள்

பண்டிகை என்று வருவதால் அவர்களுக்கு அது தேவையில்லாமல் இருந்தது 

ஆனால் விவசாயம் செய்ய பருவ காலங்கள் தேவை ஆகையால் 

ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவாகிறது.
அந்த பருவம் வரும் போது மட்டுமே பயிரிட முடியும் இல்லையேல் பயிர்கள் வீணாகும்

முருகனே உலகத்தின் முதல் விவசாயி அதற்கு கார்த்தீகை தீபமே சான்று.

அன்று மானாவரி பயிர்கள் தான் விவசாயம் செய்தார்கள் ஆகையால் தான் காரத்தீகை அன்று  மா விளக்கில் விளக்கை ஏற்றி நன்றி கூறுகிறோம்* 

அந்த மானாவாரி பயிர் பருவம் தொடங்கும் ஆங்கில மாதம் படி டிசம்பரில் தான் தொடங்குகிறது 

ஆகையால் முருகனின் விவாசாயத்திறக்கான‌ வருட பிறப்பு டிசம்பர் மாதத்தில் தான்.

அங்கு காட்டில் விளையும் பயிர்களே மானாவாரி பயிர்கள்.  சோளம், பருத்தி, கிழங்கு வகைகள்‌

இதைப்போல் தான் எகிப்திலும் மானாவாரி பயிர்கள் விளைவிக்கிறார்கள் 

ஆனால் பாலை வனத்தில் காடுகள் ஏதும் இல்லை ….

எப்படி மானாவாரி பயிர்கள் விளைவித்திருப்பார்கள்.  

இலங்கையிலிருந்த தமிழர்கள் கிமு 7000 ஆண்டாளவில் எகிப்து நாட்டிற்குச் சென்று அங்கிருந்த எகிப்திய தமிழர்களுக்கு விவசாயம் சொல்லி தந்திருக்கிறார்கள்….

ஆகையால் விவசாயம் கண்டுபிடித்த  முருகனிற்கு நன்றி கூறுவது போல எகிப்திலும் முருகனுக்கு நன்றி செலுத்துகிறார்கள் அமுன் (amun) என்ற பெயரில்

குறிப்பிடும் காலங்கள் மாறலாம் என்னை பொருத்தவரையில் கி.மு 20000 ஆண்டாளவிலே விவசாயம் செய்திருக்க வேண்டும் என்று..

 இப்படி பார்த்தால் கி.மு 10000 ஆண்டாளவிலே நெல் விவசாயம் வந்திருக்க வேண்டும்

நாம் நினைக்கும் நாளில் புது வருட பிறப்பை தொடங்க முடியாது அதில் பிழை எற்ப்பட்டால் சரி பார்க்க கூடிய நாளாக இருக்க வேண்டும்

அப்படி ஒரு ஆண்டில் நான்கு நாட்கள் வருகிறது...

பூமி 23.5deg சாய்வு(Tilt) நிலையில் உள்ளது ஆகையால் தான் சில காலம் புமியின் வடபகுதி(northern hemisphere) சூரியனுக்கு பக்கத்திலும் சில காலம் புமியின் தென்பகுதி(Southern hemisphere)சூரியனுக்கு பக்கத்திலும் வரும்

இதன் காரணமாக தான் பருவகலாங்கள் உண்டாகின்றன (seasons) 

இதை தான் ஆங்கிலத்தில் winter solstice and summer solstice என்று சொல்கிறார்கள் 

இப்படி சூரியனின் கதிர்கள் தெற்கில் இருந்து வடக்கிற்கும் ( tropic of cancer to tropic of Capricorn). வடக்கில்  இருந்து தெற்கிற்கும்( tropic of Capricorn to tropic of cancer) பயணம் செயவதை 

உத்திராயணம் என்றும் தட்சிணாயனம் என்று அழைத்தனர் தமிழர்கள்

ஆனால்  சூரியன் எப்படி பூமியை சுற்றி வரும் பூமி தானே சூரியனை சுற்றி வரும் என்று கேள்வி கேட்க நினைக்கும் நன்பர்களுக்கு.......  

 பூமியில் இருந்து பார்க்கும் பொழுது சூரியன் தான் சுற்றி வருவது போல் தெரியும் இதை குறிப்பு சட்டகம் என்று கூறுவார்கள்

In science we can called that  frame of reference

தட்சிணயானம் முடிந்து உத்திராயணம் தொடர்வதை புது வருட பிறப்பாக எடுத்து கொள்ளலாம். இதை (winter solstice )  என்றும்.

அதைப்போல் உத்திராயணம் முடிந்து தட்சிணயானம் தொடர்வதை புது வருடமாக எடுத்து கொள்ளலாம் (summer solstice) 

Winter solstice ஆங்கிலம் மாதத்தின் காலம் டிசம்பர் 21 

அதைப் போல் summer solstice ஆங்கிலம் மாதத்தின் காலம் ஜூன் மாதம் 21

இன்னும் இரண்டு நாட்கள் புது வருட பிறப்பாக எடுத்து கொள்ளலாம் 

பூமியின் அச்சு (axis) சாயந்துள்ளதால் இரவு பகலும் கூட சமமாக இருப்பதில்லை 

ஆனால் வருடத்தின் இரண்டு நாட்கள் தான் சமமாக வரும் 
சூரியனின் கதிர்கள் உத்திராயாணத்தில் ஒரு நாளும் தட்சிணயானத்திலும் ஒரு நாளும்  வரும்

அதாவது பூமத்திய ரேகையில்(equator) சூரியனின் கதிர்கள் விழும் போது இது நடக்கும் 👆

உத்திராயணத்தில் நிகழும் சம நாள் மார்ச் 20 தேதி வருகிறது  இதை ஆங்கிலத்தில் (spring equinox) என்று அழைப்பார்கள்

தமிழ் மாயன்கள் இதற்கு ஒரு பிரமிடுகளையே கட்டியுள்ளார்கள்  

தட்சிணாயனத்தில்  நிகழும் சம நாள் செப்டம்பர் 22 தேதி வருகிறது  இதை ஆங்கிலத்தில் (autumn equinox) என்று அழைப்பார்கள்

இந்த நான்கு நாட்களில் எதை வேண்டுமானாலும் புது வருட‌ பிறப்பாக எடுத்து கொள்ளலாம்

ஆனால் முருகனின் மானாவாரி விவசாயம் இன்றைய டிசம்பர் மாதத்திற்கு இணையான அன்றைய நாளில் தொடங்கியதால் 

அவர்  winter solstice புது வருடமாக எடுத்து கெண்டார்
   
மாலை 5:30 மணி அளவில் திருவாதிரை நட்சத்திரம் கண்ணில் பட்டால் அடுத்த நாள் புத்தாண்டு ஆகும்

நட்சத்திர கூட்டங்களின்  அன்றைய பெயர் ஓரை

ஓர் + ஐ = ஓரை 

(ஓர் என்றால் நட்சத்திரங்களை ஒன்றினைக்க என்ற‌பொருள்) 
  (ஐ என்றால் அழகு என்று பொருள்)

 ஒரை  என்றால் நற்சித்திரம் (அழகாக வரையப்பட்ட ஒன்று )

 அது தான் நட்சத்திரம் என்றானது 

இந்த ஓரையன் = ஓரியன் (Orion) என்று ஆங்கிலத்தில் மாறியது

அன்று ஒரே ஒரு ஓரை மட்டும் இருந்தால் சிவனே முதல் சித்தர் என்பதால் 

சித்தர் + ஓரை = சித்தரோரை = சித்திரை என்றானது 

11000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கபட்டதால் 

ஆதி + ஓரை = ஆதிரை, திரு என்ற அடைமொழி தரப்பட்டு

திருவாதிரை என்று சிவனை குறிக்கும் நட்சத்திரமாக மாறியுள்ளது









முருகனின் விவசாய மாதத்தின் முதல் மாதம்  சிவனின் பெயரால் உருவாக்கியதால் 

 சித்திரையையே தமிழ் புத்தாண்டாக  கெண்டாடினார்கள்

அதாவது டிசம்பர் 21லிருந்து 30 மாதங்களுக்கு ஒரு மாதம் என்ற முறையில் 11 மாதங்களையும் 12 மாதத்தை 35 & 36 நாட்களை மாதமாக்கி 

அடுத்த டிசம்பர் 20 (சித்தர் ஓரையை ) திருவாதிரை நட்சத்திரம் மாலை வானில்  தெரிந்தவுடன் அடுத்த வருட புத்தாண்டை கொண்டாடினார்கள்…

முருகன் கொண்டாடிய புத்தாண்டு காலம் டிசம்பர் 21 அன்று 

இப்போது ஏப்ரல் மாதத்தில் ஏன் கொண்டாடுகிறோம்

கோள்கள் அனைத்தும் நிலையானது இல்லை(not stable) அது வட்டப்பாதையில்
( elliptical orbit) சுற்றி கொண்டே வருகிறது

*சூரியனும் வட்டப்பாதையில் சுற்றி கொண்டே வருகிறது அது ஒரு வருடம் சுற்றி வர 24000 ஆண்டுகள் ஆகும் என்பது ஆய்வாளர்களின் கூற்று*

இதனால் முருகன் காலத்தில் தெரிந்த திருவாதிரை நட்சத்திரம் (சித்தர் ஓரை) 2000 வருடங்களுக்கு பிறகு ஜனவரி 20 மாதத்தில் தெரிந்தது.

சூரியன் நகராமல் இருந்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் டிசம்பர் 21 தான புத்தாண்டாக இருக்கும்

இதனால் ஒவ்வொரு 2000 வருடத்திற்கு பிறகு ஒரு மாதம் என்ற அளவில் காலத்தால் தள்ளி திருவாதிரை காட்சியளிக்கும்

முருகன் காலத்தில் டிசம்பர் 21 ல் தெரிந்த winter solstice 

விஷ்ணு காலத்தில் மார்ச் மாதத்தில் சித்தர் ஓரை தெரிந்தது (vernal equinox) ஆகையால் மார்ச் 21ல் இருந்து ஏப்ரல் மாதம் வரை 

இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. விஷ்ணு ஒரு  வானியல் சித்தர் தானே 

2000 ஆண்டுகளுக்கு பிறகு இதுவும் மாறும் மே மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் உதிக்கும் அப்போது தமிழ் புத்தாண்டு வரும்

இன்னும் ஆதாரமாக பழந்தமிழர்கள் குடியெறிய  பல நாடுகளில் ‌இன்னும் சித்திரையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்  அதற்கு 
எ.டு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மெக்சிகோ, பெரு, ஆப்பிரிக்கா, எகிப்து, சீனா, திபெத், போன்ற நாடுகளில் இன்றும் 

 நான் புத்தகமாக வெளியிட உள்ளதால் என்னால் இதற்கு மேல் ஆதாரங்களை தர இயலாது இயற்கையின் அருளால் புத்தகமாக வரும் போது இன்னும் பல விடயங்களை தெரிந்து கொள்வீர்கள்   தமிழரின் அறிவியல் வியத்தகு ஒன்று 

ஒரே ஒரு ஆதராம் மட்டும் இப்போதைக்கு தருகிறேன்

என்னுடைய தோழி ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கிறார் 

அவளின் முன்னோர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்து சென்ற ஒராண்‌ என்று அழைக்கப்படும்  தமிழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்

அவர்கள் இன்றும் தமிழ் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் தாங்கி நிற்கிறார்கள் 

அவர்கள் இன்றும் சித்திரை மாதத்தையே சர்கூல் (sarhul festival) என்று  அவர்களின் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்

பண்டைய காலத்தில் பொன்னோ் பூட்டுதலில் தொடக்கமாக அரசன் பொன்னால் செய்த ஏரைக்கொண்டு நிலத்தை உழுதான்

அவன் உழுத பின்னரே, குடிமக்கள் உழுதலைத் தொடங்கினா். மன்னன் பொன்னோ் பூட்டுதலைத் தொடங்கி வைப்பதன் நோக்கமே, பருவ காலத்தில் நிலத்தை உழுது, விதை விதைத்து, பயிா் செழித்து, கதிா் விளைந்து, விளைச்சல் பெற்று மக்களுக்கு ஏற்படக்கூடிய பசி பஞ்சம் தீா்ப்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தது

இந்த பொன்னேர் கட்டுவதும் சித்திரையில் தான் முருகன் முதல் விவசாயம் செய்ததும் சித்திரையில் தான்

இந்த பொன்னேர் செய்வதும்  மானாவாரி பயிர்களில் தான்… 

ஏன்னெற்றால் முருகன் முதல் விவசாயம் செய்தது மானாவாரி பயிர் தானே …

ஆகையால் சித்திரையே தமிழர் புத்தாண்டு..




ஆகையால் தமிழர்கள் இந்த புத்தாண்டில் விழிப்புற்று வரப்போகும் பேராபத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் சிந்தித்து பாருங்கள்

அனைத்து  தமிழர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏


Comments

Popular posts from this blog

தமிழர் புத்தாண்டு சித்தர் ஓரையா? இல்லை தையா ?

தமிழர்கள் பின்பற்றியது மதமா..? சமயமா..?