தமிழர்கள் பின்பற்றியது மதமா..? சமயமா..?

 


சமயம் மற்றும் மதம் இதில் எதை தமிழர்கள் பின்பற்றியிருப்பார்கள்..!

******†***


சமயம் என்பது சமையம் என்ற சொல்லின் திரிபு. 

சமை - சமையம் - சமயம் 

சமைதல் என்றால் ஆக்குதல் , பதமாகுதல், தகுகியாக்குதல், முழுமைப்படுத்துதல் என்று பொருள்படும்
 
சமையல் என்றால்  உண்ணுவதற்கு ஏற்ற வகையில் உணவைப் பக்குவப் படுத்துதல் என்பதாகும்


சோறு ஆக்குதல்  என்பது போல

ஆக்குதல் என்றால் குற்றம் களைந்து

அரிசியில் கிடக்கிற கல்லும் குறுநொய்யும் ஆகிய குற்றத்தைக் களைந்து, அரிசியை உண்ணும் பதத்துக்கு ஆக்கி முழுமைப் படுத்துதல்..! என்றாகும்

அதுபோல…!

காட்டுவிலங்காக இருந்தவனை மனிதனாக ஆக்கி, அவனுடைய குணத்திலும் மனதிலும் காணப்படும் ஓட்டைகளை நிரப்பி, தன்னையே எண்ணிக் கொண்டிருக்காமல் உடன்வாழ்பவர்களைப் பற்றியும் எண்ணிப் பார்க்கச் செய்து அவனைப் பக்குவப்படுத்தி 

அன்பால் பூக்கச் செய்து, முழுமைப்படுத்தித் தெய்வநிலைக்கு ஏற்றுவதே சமயம்.


''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்''...…..!

என்னும் வள்ளுவன் அறிந்த சமத்துவ சமூகத்தை உருவாக்கும்.



மதம் என்றால் என்ன…..?
 
வதை + அம் = வதம் 

வதம் என்றால் கொல்லுதல் என்று பொருள்படும்

வதம் என்ற சொல்லின் திரிபே மதம்

ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் மதநீர் வழியும் . 

இந்த மதநீர் ஆண் யானைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் , ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது. 

இவ்வாறு மதநீர் வழியும் காலத்தில் யானைக்கு "மதம் பிடித்தல்" என்று கூறுவார்கள்

அதுபோல கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்துச் செல்லும் போது அன்பின் அடையாளமாக நன்நெறிகளைப் போதிக்கும் ஆசான் என்று பல நல்ல பெயர்களை ஒரு பொய்யான போர்வையாகத் மாற்றி கொண்டு 

அதனுள் ஒளிந்து மக்களை முட்டாள்களாக , பகைவர்களாக மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஆபத்தானது மிருகமே மதம்

மதம் பிடித்த யானை போல் முறையின்றி திரியும்

"மதம் மதவெறியை மட்டுமே உருவாக்கும் மனிதனை அறிவார்ந்த சிந்தனைகளை சிந்திக்க விடாமல் செய்யும்"

இவ்வாறாக

#சமயத்தையும்# 

#மதத்தையும்#

 ஒன்று என்று மக்கள் மனதில் நஞ்சாக புகுத்தி  தமிழர்கள்  வாழையடி வாழையாக பின்பற்றி வந்த சமயம் என்னும் அறிவுநெறியை வெறுக்க செய்து அதன் உண்மை தன்மையை மறைத்து வருகிறார்கள் கயவர் கூட்டம்.....


                                                                       ….…#மெய்யறிவு கற்போம்#




                                                                   ******************

Comments

  1. நல்ல சிந்தனை. ஆழ்ந்த சிந்தனைக்குரிய தொடக்கம். தொடர்ந்து பதிவிடுங்கள். மெய்யறிவு
    கற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மேலும் உங்கள் ஆய்வு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு👌👍🏻

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சித்தர் ஓரையே தமிழர் புத்தாண்டு

தமிழர் புத்தாண்டு சித்தர் ஓரையா? இல்லை தையா ?