தமிழர் புத்தாண்டு சித்தர் ஓரையா? இல்லை தையா ?

நித்திரையில் இருக்கும் தமிழா

          சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் 

          புத்தாண்டு…

         அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் 

          கூட்டம் காட்டியதே…‌ 

         தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு


        தமிழர் புத்தாண்டு உண்மையில் எது 
       சித்தர் ஓரை என்று அழைக்கப்படும் சித்திரையா இல்லை தையா




 தை தான் என்று பாரதிதாசனே சொல்லிவிட்டாரே ஆகையால் தை தான் தமிழர் புத்தாண்டு என்று சொல்லுகிறார்கள் …..

இன்னும் மேலே சென்று ஒரு கல்வெட்டை காட்டுகிறார்கள்…. 

அதன் உண்மை தன்மை என்ன ????





source link :  https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/03015826/Ancient-inscriptions-found-in-the-first-month-of-the.vpf


அதில் தை தான் என்று‌ குறிக்கப்பட்டுள்ளதே என்று  காட்டுகிறார்கள் 

   அந்த கல்வெட்டின் காலம் 300 ஆண்டுகள் பழைமையானது தான்

அதாவது உங்கள் கொல்லு தாத்தாவின் காலத்தைச் சேர்ந்தது

நித்திரையில் இருக்கும் தமிழா 50,000 ஆண்டு பழமையான புத்தாண்டுக்கு சொந்தக்காரன் நீ… வெறும் 300 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டை கொண்டு முடிவு செய்யலாமா….💪🏾

சரி 


அன்றைய காலகட்டத்தில் இருந்த  ஆய்வாளர்களின் மனநிலையை பார்க்க வேண்டும்…..


அப்போது திராவிடம் என்ற‌ மாயையிலும் மற்றும் தமிழர்களுக்கு எதிரானவர்கள் ஆரியர்களே என்ற‌ நிலைப்பாட்டில்  ஆய்வாளர்கள் இருந்தார்கள்

அதாவது   தமிழ் vs சமஸ்கிருதம்

ஆகையால் சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்ட‌ அனைத்தும் ஆரியர்களுடையது அது தமிழர்களோடது இல்லை என்று முடிவுக்கு வந்து தமிழ் புத்தாண்டு தை தான் என்று‌ முடிவு செய்கிறார்களை ஒழிய எந்த ஒரு ஆய்வு செய்து இதை உறுதி படுத்தவில்லை


அன்றைய காலத்தில் பாரதிதாசன் போல் பல பேர் திராவிட சித்தாந்ததில் இருந்தார்கள்

மொழி போர் நடக்கும் நேரத்தில் அவர்கள் அனைவரும் திராவிடத்தில் இருந்து விலகி விட்டார்கள்

நாம் அனைத்தையும் படிக்கிறோம் பார்க்கிறோம் ஆனால் மனிதனின்  உளவியலை பற்றி நாம் கவணிக்க தவறுகிறோம் 

அது என்னவென்றால்

நாம் எந்த இடத்தில் இருக்கிறமோஅந்த இடத்திற்கு ஆதராவாக தான் பேசுவோம் வேலை செய்வோம் இது தான் உண்மை

எ.டு 

நீங்கள் ஒரு கட்சி சார்ந்து இருக்கிறீர்கள் என்றால் அந்த கட்சி பல துன்பங்களையும் மற்றும் பல கேடு திட்டங்களையும் கொண்டு வந்தாலும்  அந்த கட்சிகாக தானே வேலை செய்வீர்கள் யோசித்துப் 
 பாருங்கள்….

அதுபோல தான் அன்றைய ஆய்வாளர்கள் முடிவு எடுத்தவர்களின் நிலைமையும் 

அவர்கள் அனைவரும் திராவிடம் என்ற‌ நிலைப்பாட்டில் இருந்தாமையாலும் ஆரியர்கள் தான் எதிரிகள் என்று  அவர்களை எதிர்க்கும் நோக்கில் அனைவரும்  தமிழ் புத்தாண்டு தை என்ற‌ நிலைப்பாட்டிற்க்கு வந்தார்கள்


இப்போது சமஸ்கிருதத்தில் இருக்கும் அனைத்தும் ஆரியர்களுடையது என்று எடுத்துக்கொண்டால்…

தமிழர்கள் எதுமே கண்டுபிடிக்கவில்லை எல்லாம் அவனோடு தான் என்று நீங்களே அவனுக்கு தாரைவார்த்து  கொடுப்பது போல் ஆய்விடும்......


85 % சதவீதம் தமிழ் மொழி இல்லையென்றால் சமஸ்கிருதம் என்ற மொழியே இல்லை என்பது ஆய்வாளர்களின் கூற்று

தமிழ் மொழியில் இருந்து அறிவியலில் இருந்து மொழி வரை அனைத்தையும் திருடிக்கொண்டு அவர்களுடையது போல் காட்டுகிறார்கள் 

இப்படி திருடி கொண்டதை  மீட்க வேணடியது ஒவ்வொரு தமிழரின் கடமைகள் தானே




                                                                                    தொடரும்


                                                                                    ….#மெய்யறிவு கற்போம்#




Comments

  1. ஆய்வில் தெளிந்த சிந்தனை. மேலும் இது போன்ற படைப்புகள் படைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சித்தர் ஓரையே தமிழர் புத்தாண்டு

தமிழர்கள் பின்பற்றியது மதமா..? சமயமா..?